நீச்சல் கற்க 6 எளிய முறைகள் | Tiffin Carrier
நீங்களும் நீச்சல் எளிதில் கற்றுக்கொள்ளலாம்??
நாம் மிக சிறந்த படிப்பாளியாக இருக்கலாம் சிறந்த ஓவியர் ஆக இருக்கலாம்!!!!
ஆனால் நீச்சல் என்பது ஒரு கலை பாம்பை பாத்து பயம் கொள்ளாதவர்கள் கூட கிணற்றை, ஆற்றை பாத்தால் பயம் வரும் காரணம் அவர்களுக்கு நீச்சல் என்பது எட்டா கனியாக இருக்கும்.
கிராமத்தில் வசிக்கும் பெருமான்மை மக்கள் நிச்சயம் நீச்சல் அறிந்து இருப்பார்கள் காரணம் அவர்களுக்கு அங்கு அனைத்தும் இருக்கும் குளம், கம்மா, ஏரி, ஆறு முக்கியமாக கிணறு.
இந்த எளிய முறைகளை நீங்கள் கற்று கொண்டால் நீங்களும் நீச்சலில் வெற்றி பெற முடியும்.
பல சிறுவர்கள் பெண்கள் என பெரும்பான்மை மக்கள் கிணறுகளில் தான் தங்கள் நீச்சலை பயின்று இருப்பார்கள்
முதலில் ஆழம் இல்லாத குளம் போன்ற இடத்தில் நீச்சல் தேர்ந்த ஓர் நண்பர் உதவி உடன் இதை செய்ய வேண்டும்.
உங்கள் உடலை சமமாக இருக்கு மாறு நிச்சலின் முதல் படியை எடுக்க வேண்டும், உங்கள் உடல் மிதக்கும் திறனை பெற்றால் உங்களுக்கு நீரின் மேல் உள்ள பயம் பறந்து போகும்.
அதன் பிறகு நீச்சல் தேர்ந்த ஓர் நண்பர் உடன் கிணறு, ஏரி போன்ற இடம் செல்லலாம்.
அங்கே சென்று உங்கள் உடலில் இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு மேலும் பாதுகாப்புக்கு பிளாஸ்டிக் கேன், தெர்மோகோல் போன்ற உங்கள் எடையை தாங்கும் பொருளை வைத்து கொண்டு உங்கள் கை, கால்களை நன்றாக அசைக்க வேண்டும்.
இதை தொடர்ந்து பயிற்சி செய்தால் நீங்களும் நிச்சலில் மாஸ்டர் ஆகலாம்.
அடுத்த பதிவில் நிச்சலில் எத்தனை வகை உள்ளது என்பதை காணலாம்.
நன்றி???
முழு வீடியோ எங்கள் you tube பக்கத்தில் உள்ளது.
சேனல் லிங்க்.
https://youtube.com/c/tiffincarrier
No comments