ads header

Breaking News

செஞ்சி மூலிகை ஆடு |Villupuram Dt Biggest Goat Market|செஞ்சி ஆடு சந்தை|Ti...



செஞ்சி மூலிகை ஆட்டு சந்தை 


இந்த செஞ்சி வாரசந்தை பிரதி வரம் வெள்ளிக்கிழமை தோறும் கூடுகிறது.

 இந்தச்சந்தை அமைந்து உள்ள இடம் விழுப்புரம் மாவட்டம்.
 செஞ்சி என்ற பகுதியை மையமாக கொண்டு அமைந்து உள்ளது.

நீங்கள் விழுப்புரம் நபராக இருந்தால் அங்கேய் இருந்து 40 km தொலைவில்செஞ்சி உள்ளது.

நீங்கள் திண்டிவனம்  நபராக இருந்தால் அங்கேய் இருந்து 28  km தொலைவில் செஞ்சி உள்ளது.

நீங்கள் திருவண்ணாமலை நபராக இருந்தால் அங்கேய் இருந்து 29   km தொலைவில் செஞ்சி உள்ளது.



செஞ்சி  சந்தையின் மேல்பார்வை  : 

செஞ்சி வார சந்தை கூடும் நேரம் அதிகாலை 3  மணி முதல் மதியம் 11  மணி வரை.

இந்த வார சந்தை ஆடுகளுக்கு மிகவும் பெயர்போனது  அதிலும் செஞ்சி மூலிகை ஆடு இவர்களுக்கு தனியான அடையாளத்தை கொடுத்து உள்ளது.

அது என்ன செஞ்சி மூலிகை ஆடு??

செஞ்சி என்ற ஊர் மிகவும் செழிப்பான இயற்கையோடு ஒன்று இணைந்த பின்னி பிணைந்த ஊர் ஆகும்.

எழில்மிகு
ராஜா கோட்டையும், ராணி கோட்டையும் ,செய்யதுமுட்டை மிட்டாய் கடையும், மலை அடிவார சிவன் கோவில் குடை சூழ ,ரங்கநாதர் கோவில் அருளி இருக்க,பசுமலை முருகன்
நம்மை அழைக்க ஒன்று சேர மலைகளின் நடவுனில் அமைந்த இருக்கும் ஊர் தான் எங்கள் செஞ்சி.

இங்கே மலைகளில் உள்ள மூலிகை செடிகளை உண்று செழிப்போடு வளரும் ஆடுகளை தான் செஞ்சி மூலிகை ஆடு என்று இந்த ஊர் மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.

காலப்போக்கில் அப்பெயர் மருகி செஞ்சி மூலிகை ஆடு என்ற சிறப்பு பெயரை இவர்களுக்கு தந்து உள்ளது.


சந்தையின் சிறப்புகள்:

இங்கே ஆடு, மாடுகள்,கருவாடு,காய்கறிகள், மாமிசம் வெட்ட பயன்படும் மரக்கட்டை, இன்னும் பல இங்கே காணப்படுகின்றன

ஆடுகளில் நாட்டுஆடு, வெள்ளாடு, செம்மறியாடு,செம்மறிக்கிடா போன்றவை இங்கே காணலாம்.

கால்நடைகளை பொறுத்த வரை மாடுகள், கறவை மாடுகள்,கன்றுக்குட்டிகள் வாங்க சிறந்த இடம் இந்த செஞ்சி வார சந்தை.

இந்த சிறப்பு வாய்ந்த செஞ்சி மூலிகை ஆடுகளை வாங்க தேனீ, திருநெல்வேலி ,மதுரை, கேரளா,கர்நாடக போன்ற மாவட்டம் மாநிலம்களில் இருந்து மக்கள் ஆரவாரமாக வருகின்றனர்.


சந்தையில் கூவல் ஒலி ஒரு பக்கம் இருக்க அதிகாலைலிருந்து படம் பிடித்து கொண்டு இருந்த எங்கள் படப்பிடிப்பாளர்க்கு அடிவயிற்றில் பசி மணி கூவல் கேட்டு விட்டது.

அங்கேயே சூடான வடையும், பஜ்ஜியும் கொடுத்து அவர் பசிபோக்கி நானும் உண்டேன்.


காலம் செல்ல செல்ல கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆடுகள் தங்கள் புது இடத்தை நோக்கி வாகனத்தில் பறந்து செல்ல நாங்கொலோ அங்க
பேட்டி எடுத்து கொண்டு இருக்கிறோம்.

போதும் என்று உடல் சொல்கிறது வேண்டாம் உன் தொழிலை செய் என்று மனம் கூற இரண்டிற்கும் நடுவில் அகப்பட்ட இனம்புரியாத தருணம் அது.......கடைசியில்  எங்கள் மனம் சொல்வதை கேட்டு படப்பிடிப்பை தொடர்ந்து புதிய மனிதர்களை நோக்கி அவிழ விட்டோம்  எங்கள் கேள்வி கணைகளை எத்துணை கேள்வி அத்துணை பதில்கள்.

இறுதியாக நிறைவோடு எங்களுக்கு அங்கே ஒத்துழைப்பு அணைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றி சொல்லி பிரியா விடைபெற்றோம் செஞ்சியிலிருந்து...........

நன்றி







No comments