ads header

Breaking News

அவலூர்பேட்டை பலசரக்கு சந்தை| உழவு மாடு வாங்க சிறந்த சந்தை |Tiffin Carrier



அவலூர்பேட்டை பலசரக்கு சந்தை 

இந்த அவலூர்பேட்டை சந்தை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது வாரந்தோறும் புதன் கிழமையில் சந்தை கூடுகிறது. இது ஒரு பலசரக்கு சந்தை இங்கு கால்நடைகள் , ஆடு,காய்கறிகள் ,விட்டு உபயோக பொருட்கள் வாங்க சிறந்த இடம். இங்கு உழவு மாடுகள்,எருமை மாடு,கன்றுகள்,சீமை மாடுகள் வாங்க சிறந்த இடம் இந்த அவலூர்பேட்டை சந்தை. மேலும் தகவலுக்கு 8122577708 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.




இந்த அவலூர்பேட்டை பலசரக்கு சந்தை செஞ்சியில் இருந்து 20km தொலைவில் உள்ளது. இந்தசந்தைக்கு நாங்கள் காலை 6 மணி என்ற அளவில் சென்றோம். மலைக்கோவில் முருகன் பார்க்க.......பச்சை வயல் வெளி நம்மை சூழ.......நடுவில் வீற்றுஇருக்கும் சந்தை தான் இந்த அவலூர்பேட்டை சந்தை

இதை நான் ஏன் பலசரக்கு சந்தை என்று கூற காரணம் இங்கே இல்லாத பொருட்கள் இல்லை. சந்தையில் கால்நடைகள், ஆடு,மாடு,எருமை மாடுகள்,கறவை மாடுகள், கன்றுகள், நாட்டு மாடுகள்,உழவுமாடுகள் என அனைத்தும் உள்ளது.
இவை அனைத்தும் ஒரு பக்கம் களைகட்ட மற்றோரு இடத்தில போய் பார்த்தா அங்க பச்சை பசுமையான இயற்கை காய்கறிகள், பழங்கள்,அப்பளம்,வத்தல் என்று வியாபாரிகள் நம்மை அவர்கள் கடைக்கு குவி குவி அன்போடு அழைத்தார்கள்.

இவை ஒரு பக்கம் இருக்க கடந்து சென்று பார்த்தால் அங்கே ஒரு தாத்தா 32 வருடகாலமாக காய்கறி விதைகளை அங்கே விற்று கொண்டு இருந்தார்.அவரிடம் சென்று பேச்சு கொடுத்து அவரும் எங்கள்காணொளியில்
பேச வைத்தேன்.....அருமையான அய்யா அன்போடு எங்களிடம் பேசினார். அவரின் முகத்தில் தெரிஞ்சது அவர் அந்த தொழிலை எப்படி காதலித்து செய்கிறார் என்பதை.....................

முற்றும்.......
























No comments